Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமேஸ்வரத்தில் தடைசெய்யப்பட்ட 65 கிலோ பான் மசாலா பறிமுதல்: ஒருவர் கைது..

இராமேஸ்வரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருள்கள் அதிகளவில் விற்கப்படுவதாக இராமேஸ்வரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காந்தி நகரில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பாலசுப்ரமணியன் என்பவரது குடோனில் 9 மூடைகளில் 65 கிலோ பான் மசாலா, குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். குடோன் உரிமையாளர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

விசாரணையில், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு லாரி மூலம் கொண்டு வரப்படுவதாகவும், மதுரையில் இருந்து அனுப்பும் மொத்த வியாபாரி பற்றி தகவல் தெரியவில்லை. கோயில் மற்றும் இராமேஸ்வரம் தீவு முழுவதும் உள்ள சிறு கடைகளுக்கு விற்பனைக்காக குட்கா சப்ளை செய்து வருவதாக தெவித்துள்ளார்.

ராமேஸ்வரம் தீவு முழுவதிலும் உள்ள கடைகள் மற்றும் தனியார் குடோன்களில் போலீசாரால் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்படும். சோதனையில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக தெரிந்ததால் கடையின் உரிமை ரத்து செய்யப்பட்டு, கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். பறிமுதல் செய்த போதை பாக்கு மதிப்பு ரூ 30 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!