இராமநாதபுரம் மாவட்டத்தில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகள். அரியமான் கடற்கரையில் தொடக்கம்..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சாத்தக்கோன்வலசை ஊராட்சி அரியமான் கடற்கரையில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்து சுற்றுப்புறத் தூய்மை பணிகளில் மேற்கொண்டார்.மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது:பிரதமர் இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊரகப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தூய்மையே சேவை விழிப்புணர்வு நடவடிக்கைகளை துவக்கி வைத்தார். அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகள், 7 பேரூராட்சிகள், 4 நகராட்சிகளில் 11.9.2019 முதல் 27.10.2019 வரையிலான நாட்களில் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தமிழக முதல்வரின் உத்தரவின்படி தமிழகத்தில் 01.01.2019 முதல்
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் தற்போது துவங்கப்பட்டுள்ள இவ்விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொட்களை தவிர்த்தல்,அதற்கான மாற்றுப் பொருளை பயன்படுத்திட ஊக்குவித்தல் உள்ளிட்ட நோக்கங்களை வலியுறுத்தி மூன்று கட்டங்களாக விழிப்புணர்வு பணிகள் மேலும் தீவிரமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.முதற்கட்டமாக 11.09.2019 முதல் 01.10.2019 வரை சுற்றுச்சூழல் மேம்பாடு, பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதாரம் போன்றவைகளை வழியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக 02.10.2019 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் பங்களிப்புடன் கிராமங்களில் உள்ள பொது இடங்கள், அரசு கட்டடங்கள், சாலை மற்றும் சுற்றுப்புறங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், மூன்றாம் கட்டமாக 03.10.2019 முதல் 27.10.2019 வரை கிராம பகுதிகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரித்தல், மறுசுழற்ச்சி செய்திட ஊக்குவித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என தெரிவித்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ‘பிளாஸ்டிக் ஒழிப்பு” உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தூய்மை சேவை பணியில் சிறப்பாக செயல்பட்டசாத்தக்கோன் வலசை இந்திரா காந்தி, பிள்ளை மடம் மாரீஸ்வரி, முத்துமாரி, பாகம்பிரியாள் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பாராட்டினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்ஸி லீமா அமாலினிஉதவி திட்ட அலுவலர்கள் கண்ணன், முருகேசன், கிருஷ்ணகுமார், சரவண பாண்டியன்,வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி உதவி பொறியாளர்கள் அருண்பிரசாத், இராஜேந்திரன், ஊராட்சி செயலாளர்கள் புல்லாணி குமார் (சாத்தக்கோன் வலசை), ராமநாதன் (வேதாளை) உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..