ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்த மத்திய அரசை கண்டித்து முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ். பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் இன்று நடைபெற்றது. அதில இந்தியகாங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு,முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.எஸ்.விக்டர்,மாவட்ட துணை தலைவர் முத்துகிருஷ்ணன், வட்டாரத் தலைவர்கள் ஜோதிபாலன் (நயினார்கோவில்), சுப்ரமணிய சேர்வைகாரர் (கடலாடி), சேது பாண்டியன் ( திருப்புல்லாணி – கிழக்கு), கந்தசாமி ( திருப்புல்லாணி – மேற்கு), கோவிந்தன் (கடலாடி கிழக்கு), முனீஸ்வரன் (போகலூர்), கோபால் (ராமநாதபுரம் ) , எம்.ஜி. விஜய ரூபன் (மண்டபம்) மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்ட் கணேசன், மாவட்ட ஓபிசி அணி தலைவர் கீழக்கரை ரஹ்மத்துல்லா, எஸ்.வி.கணேசன், சேமனூர் ராஜேந்திரன்,மாவட்ட வழக்கறிஞர் அணி அன்பு செழியன்,மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் மோதிலால் நேரு , செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் டிஎம்எஸ் கோபி நன்றி கூறினார்.மத்திய அரசு, பிரதமர் மோடிக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image