சத்தியப்பாதை இதழின் ஆசிரியரும், கீழை நியூஸ் நிறுவனரும், “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” (WJUT) மாநில இணைச் செயலாளருமான திரு சையது ஆப்தீன் வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி.!

தியாகத்தின் பெருமையை ஊருக்கும், உலகுக்கும் விளக்குவது தான் பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இறை தூதரான இப்ராஹிம் நபி இறைவனின் கட்டளையை ஏற்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த தமது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முன்வந்த போது வான் தூதரை அனுப்பி அதை தடுத்த இறைவன் மகனுக்குப் பதிலாக ஆட்டை பலிகொடுக்கும்படி கூறினான் இப்ராஹிமின் தியாகத்தையும் இறைவன் பாராட்டினான்,இப்ராஹிம் நபியின் தியாகத்தை குறிக்கும் வகையிலேயே பக்ரித் (தியாக திருநாள்) கொண்டாடப்படுகிறது.உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை நாம் அனைவரும் பெறவேண்டும் என்பதையே இந்த தியாகத் திருநாள் மூலம் நமக்கு உணர்த்துகிறது அனைத்தையும் கடந்து நிற்கும், இறைவனை தியாகச் செயல்கள் மட்டுமே மகிழ்ச்சிப் படுத்தும், இறைவனின் கட்டளையை ஏற்று இறைதூதர் இப்ராஹிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முஹம்மது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம் , மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்த நன்னாளில் இசுலாமிய பெருமக்களோடு இணைந்து அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து சபதம் ஏற்போம்’

வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக நாம் அனைவரும் (அனைத்து சமுதாய மக்களும்) ஒன்றிணைந்து செயல்பட வல்ல இறைவன் இத்தியாக திருநாளில் கிருபை செய்யட்டும்.!நான் சார்ந்த கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை, WJUT சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.!

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..