Home செய்திகள் இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா தேரோட்டம்

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா தேரோட்டம்

by mohan

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா 25/7/2019 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து பர்வத வர்த்தினி அம்பாளுக்கு கடந்த ஒரு வாரமாக தினமும் சிறப்பு பூஜை நடந்தது. காலை, மாலை நேரத்தில் வீதி உலா நடைபெற்றது.விழாவின் 9ஆம் நாளான இன்று (02.8.2019) காலை 11 மணியளவில் பர்வத வர்த்தினி அம்பாள் தேரோட்டம் துங்கியது. தேரில் பர்வத வர்த்தினி அம்பாள் எழுந்தருள, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயிலின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேர் பின்னர் நிலை அடைந்தது. இதைதொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

ராமநாதசுவாமிக்கும், பர்வத வர்த்தினி அம்பாளுக்கும் 05/8/2019 இரவு 7:30 முதல் 8:30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. கோயில் தக்கார் ராஜா குமரன் சேதுபதி, கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் கல்யாணி, உதவி ஆணையர் / நேர்முக உதவியாளர் ஜெயா, கோயில் கட்டுமான பணி உதவி கோட்ட இயக்குநர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள் ககாரின் ராஜ், முருகன், நேர்முக உதவியாளர் கமலநாதன், மேலாளர் முருகேசன் மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!