Home செய்திகள் 8 வழி சாலை குறித்து – உச்சநீதிமன்றம் இத்திட்டத்தை நிராகரிக்கிறது, முதல்வர் நிச்சயமாக நடத்த வேண்டும் என்கிறார் – காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் பேட்டி

8 வழி சாலை குறித்து – உச்சநீதிமன்றம் இத்திட்டத்தை நிராகரிக்கிறது, முதல்வர் நிச்சயமாக நடத்த வேண்டும் என்கிறார் – காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் பேட்டி

by mohan

மதுரை விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் பேட்டி நீட் விலக்கு குறித்து ஏற்கனவே பாராளுமன்றத்தில் கூறியுள்ள நிலையில் நீட் விலக்கு குறித்து பாராளுமன்றம் முடிவெடுக்குமா? அல்லது உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்குமா? என்பது குறித்து தெரியவில்லை.இரண்டாவதாக கொள்கை ரீதியான முடிவுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி அவர்கள் இதுகுறித்து கூறவில்லை.நீட் தேர்வு முதலில் அமுல்படுத்துவது காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் தான் என்ற கேள்விக்குஇந்திய அளவில் ஒரு திட்டம் வரும் பொழுது குறிப்பாக கல்வி ரீதியாக திட்டம் அமல் படுத்தும் பொழுது நிச்சயமாக அது குறித்த ஏற்றத்தாழ்வுகள் மறைமுக பிரச்சனைகள் இருக்க வாய்ப்பு உள்ளது.அனைத்தையும் முறையாக வகைப்படுத்தி தீர்வு கண்டிருக்க வேண்டும் கால தாமதத்திற்குப் பிறகு மாணவ மாணவிகள் தற்கொலையில் ஈடுபட்ட பிறகு இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.தலைவர் ராகுல் காந்தி கூறியது போன்று தமிழகத்தின் தமிழகத்தில் உள்ள கல்வி முறையை பின்பற்றுவது நன்றாகவே இருக்கும் அதனை குறித்து கட்சி முடிவு எடுக்கும்.

8 வழி சாலை குறித்து கேள்விக்கு

உச்சநீதிமன்றம் இத்திட்டத்தை நிராகரிக்கிறது. முதல்வர் நிச்சயமாக நடத்த வேண்டும் என்கிறார். காலம்தான் பதில் கூறும் எங்களைப் பொறுத்த வரையில் பாதை வேண்டும். விவசாய நிலங்களை அழித்து கொண்டு போகக் கூடாது என்பதுதான் எங்களது நோக்கம்.நாகர்கோவில் வழியாக சாலை அமைக்கும் பொழுது குளத்தை மூடி அதன் மீது பாதை அமைத்து விட்டார்கள் அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தூண்கள் அமைத்து சாலை அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே எங்களை பொறுத்தவரையில் விவசாயமும் வேண்டும், பாதையும் வேண்டும் அதன் முறையில் அரசாங்கம் செயல்பட வேண்டும் அவ்வாறு செயல்படாத பட்சத்தில் தான் பிரச்சனைகள் தலை தூக்குகிறது.பெட்ரோல் விலை உயர்வு சராசரியாக தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது இதனால் விலைவாசி உயர்வு கூடும். மேலும் மத்திய அரசாங்கம் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இதுவரையில் நடந்ததாக தெரியவில்லை.பெட்ரோல் விலை குறைந்து வந்திருந்தால் தமிழகத்தில் பாஜகவிற்கு வாக்குகள் கிடைக்கப் பெற்றிருக்கும்.ஆக்கபூர்வமான திட்டங்கள் பிரதமர் மோடியால் அறிவிக்கப்படாமல் அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே வசதிகளை செய்து வருகிறார்.தற்போது 400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள் 5% வரி குறைக்கப்பட்டுள்ளன ஏற்கனவே உள்ள 30 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் குறைந்து உள்ளதால் எந்த வித மாற்றமும் பணக்காரர்கள் மத்தியில் ஏற்படப்போவதில்லை இதில்2019 காண பட்ஜெட்டில் போது விவசாயத்திற்காக எந்தவித நன்மையும் இல்லை தீமை தான் உள்ளது என்று கூறினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!