முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை இந்திய பாரத இயக்கம் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற துப்புரவு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு, இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தூய்மை இந்திய பாரத இயக்கம் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற துப்புரவு விழிப்புணர்வு நிகழ்ச்சி 18.06.19 அன்று 3.00மணியளவில்  நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியினை வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த இராண்டாமாண்டு மாணவி S.பாத்திமா ஷிபானா இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா பானு கமால் இந்நிகழ்வு சிறப்புற நடைப்பெற வாழ்த்துக் கூறி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திரு.நவநீதன், தூய இந்திய இயக்க இராமநாதபுர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சுகாதரத்தை மாணவிகள் பேண வேண்டும், மாணவிகள் முன்னுதரமாக அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றும் நகரத்தை விட கிராமபுற மக்களிடம் சுகாதாரத்தை பற்றி மாணவிகள் எடுத்துரைக்க வேண்டும் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து திரு.A.ராஜ்குமார் பாஸ்கர், மாநில கழுவுதல் ஆலோசகர், UNICEF, சென்னை  சுகாதாரமாக வாழ ஒரு தனி மனிதன் முதலில் தன்னை பேண வேண்டும் என்றும், திறந்த வெளி கழிப்பறையை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும், ஓளிவில்லை மூலம் எடுத்துரைத்தார்.

தமிழக அரசு, இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தூய்மை இந்திய பாரத இயக்கத்தின் சார்பாக கல்லூரி முதல்வர் அவர்களுக்கும் மாணவிகளுக்கும் சுகாதார விழிப்புணர்வு புத்தகம் வழங்கினார்கள்.  இறுதியாக கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் அன்வர் ரொ சாஹின் நன்றியுரை வழங்க இனிதே இந்நிகழ்வு நிறைவுற்றது.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..