Home செய்திகள் மாற்றுத்திறனாளிகள் செல்ல ஏதுவாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க TARATDAC சார்பில் கோரிக்கை..

மாற்றுத்திறனாளிகள் செல்ல ஏதுவாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க TARATDAC சார்பில் கோரிக்கை..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். அனைத்து நோய்களுக்கும் இங்கு மருத்துவம் மிகச்சிறப்பான முறையில் கிடைப்பதால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நோயாளிகளும் தினசரி வந்து செல்கிறார்கள். இவர்களில் மனநோய் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளும் அடக்கம். திண்டுக்கல் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் ஒரே அரசு மருத்துவமனை இது மட்டுமே.

மனநோய் பாதித்த மாற்றுத்திறனாளிகள் தன்னிலை மறந்து வரும் நிலையில் அவர்களால் படிக்கட்டுகளில் ஏறவோ அல்லது இறங்கவோ சொன்னால் அவர்களுக்கு புரியாது. சில நேரங்களில் இரண்டு கையும் இரண்டு காலும் செயலிழந்து மிகவும் கஷ்டப்பட்டு வீல்சேரில் வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவரை பார்ப்பதற்கு படிக்கட்டுகளில் ஏற்றி இறக்கி செல்வது என்பது இயலாத காரியம்.

எனவே, உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள மனநல பிரிவு செயல்படும் கட்டிடத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்து தருமாறு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!