Home செய்திகள் பிரதமர் மோடியா? ராகுலா? என்ற விவாதம் எழுவதற்கு காரணமே ஸ்டாலின்தான் – துரைமுருகன்!

பிரதமர் மோடியா? ராகுலா? என்ற விவாதம் எழுவதற்கு காரணமே ஸ்டாலின்தான் – துரைமுருகன்!

by ஆசிரியர்

மோடியா ராகுலா என்ற விவாதம் எழுவதற்கு முழு காரணம் ஸ்டாலின் தான் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் நகர் பகுதியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

அப்போது பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் கனிமொழி பிறந்த 7 வது நாள் அவரை நான் கையிலேந்தி செல்லகுழந்தையாக வளர்த்தவன். முதல் முறை தேர்தலில் போட்டியிடும் கனிமொழியின் பிரச்சரத்தை துவக்கி வைத்திருக்கவேண்டும். ஆனால் சூழல் மாறிவிட்டது. கண்டிப்பாக தூத்துக்குடி வெற்றி விழாவில் பங்கேற்பேன். எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் கருணாநிதிக்கு பின்னால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுகொண்ட இயக்கம் திமுக மட்டும் தான்.

முதல்வராக கூட ஆகாத ஒருவரின் பெயரை இந்திய நாட்டின் தலைவர்கள் முனுமுனுக்க காரணம் ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தது தான். மோடியா ராகுலா என்ற விவாதம் எழுவதற்கு முழு காரணம் ஸ்டாலின் தான். ஸ்டாலின் ராகுல் பெயரை அறிவிக்காமல் இருந்தால் மோடிக்கு எதிராக வேறு ஒருவர் இருந்திருப்பார். ஸ்டாலினுக்கு எதிராக தமிழகத்தில் வேறொருவர் கிடையாது. காங்கிரஸ் கம்யூ கட்சியினர் கூட திமுக தலைவர் ஸ்டாலினை வழிகாட்டியாக ஏற்றுகொண்டுள்ளனர்.

இந்த தேர்தல் பாஜக எனும் அடிமைதனத்தில் இருந்து விடுதலை பெற்று தரும் சுதந்திர போர் என பிரகடனம் செய்தவர் ஸ்டாலின். திமுக அரசியல் இயக்கமாக உருவானதல்ல அடிமைதனத்தை ஒழிக்க உருவான இயக்கம். தமிழகத்தில் நடக்கு ஆட்சியை காலி செய்வதற்கு நடைபெற்ற 18  இடங்களில் அவர்களுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. 5 இடங்கள் கூட அவர்களுக்கு கிடைக்காது. அதனால் தான் என்றைக்கோ செய்த தவறுக்காக 3எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். மூன்று இடங்கள் பெற்றால் போதும் என அவர்கள் இந்த 4 தேர்தலில் போட்டியிடுகிறார். அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிடுபவர் அவர்களோடு இருந்தவர் அவரோடு சம பலம் பொருந்தியவர் அரவக்குறிச்சி 100க்கு 120சதவீதம் வெற்றி பெறும்.

25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக கூட வரும் வாய்ப்பு உள்ளவர் ஸ்டாலின்.அவருக்கு அந்த அளவுக்கு அரசியல் தெரிந்தவர். கட்சியில் உள்ள பூசல்களை தேர்தல் முடியும் வரை மறக்க வேண்டும். தேர்தல் முடிந்தபின்னர் நானே  வந்து குருப் பால்டிக்ஸை உருவாக்கி தருகிறேன். அப்போது தான் நல்ல பணி செய்வீர்கள். திமுகவினரை வெல்ல போகும் தந்திரம் எடப்பாடி ,ஓபி.எஸ்க்கு கிடையாது.அவர்கள் எமாந்த காலத்தில் ஏற்றுகொண்டவர் .திமுக தலைவரை தலைகுணிய வைக்கமாட்டோம் என தாய் மீது சத்தியம் செய்து களத்தில் வெற்றியோடு திரும்ப தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கூட்டத்தில் முன்னதாக பேசிய ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே என்  நேரு எம்.ஜி.ஆர் காலத்தில் கூட எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு பதவி மரியாதை கிடைத்தது. கடந்த 10 ஆண்டுகளில் திமுகவினருக்கு எந்த பதவியும் மரியாதையும் கிடைக்கவிடாமல் ஜெயலலிதா பார்த்துகொண்டார். பதவி மரியாதை கிடைத்து திமுக சிறக்க கட்டாயம் ஆட்சி அமைக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் , பூங்கோதை ஆலடி அருணா மைதீன்கான் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!