Home செய்திகள் எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக வரமுடியாது – பன்னீர்செல்வம் தாக்கு!..

எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக வரமுடியாது – பன்னீர்செல்வம் தாக்கு!..

by ஆசிரியர்

எந்த காலத்திலும் ஸ்டாலின் முதலமைச்சராக வரவே முடியாது என்று ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார். ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  மோகனுக்கு ஆதரவாக  துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் குறுக்குச்சாலை, தருவைக்குளம்,தாளமுத்துநகர், தேவர்காலனி மற்றும் கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட கழகம் யாராலும் அசைக்க முடியாத ஒரு இரும்புகோட்டையாகும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களுக்கு வழங்கி ஒருபொற்கால ஆட்சியை வழங்கினார். மக்களுக்கு தேவையான திட்டங்கள் மட்டுமல்லாது, அன்றாடம் தேவைப்படும் அனைத்து திட்டங்களையும் பார்த்துபார்த்து நாட்டு மக்களுக்கு செய்தார். 4கிராம் தங்கம், அத்துடன் ரூ.25,000திருமண நிதி உதவி, பட்டதாரி பெண்கள்என்றால் அவர்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் சேர்த்து ரூ.50000 நிதிஉதவியை புரட்சித்தலைவி அம்மாஅவர்கள் வழங்கினார்.

2016ம் ஆண்டு வரை இத்திட்டத்தினை  வழங்கினார். அதனை தொடர்ந்து 2016 சட்டமன்றதேர்தலில் 4கிராம் தங்கத்தை 8கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையாக அம்மா அவர்கள்அறிவித்தார். இன்றைக்கு அம்மாவின்அரசை தலைமை தாங்கி நடத்தி வரும்ம முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 8கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கிவருகிறார். பெண்களுக்கு பேறு கால நிதிஉதவியாக 2011-ம் ஆண்டு ரூ.12000 ஆகஉயர்த்தி அம்மா வழங்கினார்.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ரூ18000ஆக வழங்கப்படும் என்றுதெரிவித்தார். தற்போது அம்மாவின் அரசு ரூ.18000 ஆக உயர்த்தி வழங்கி வருகிறது. இப்படி அம்மா அவர்கள் பார்த்து பார்த்து செய்திட்ட அனைத்து திட்டங்களையும் இன்றைக்கு நல்லாட்சி நடத்தி வரும் அம்மாவின் அரசு மக்கள் நலன் சார்ந்ததிட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள்,தொலை நோக்கு திட்டங்கள், இப்படி எந்தவொரு திட்டத்தையும்க குறைக்கவில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, முந்திரிபருப்பு உள்ளிட்டபொருட்களை வழங்கினார். தற்போது அந்த பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் பரிசாக மக்களுக்குஅதிமுக அரசு வழங்கி வருகின்றது.

மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 2000ரூபாய் வழங்கப்படும் திட்டத்தினை அறிவித்து வழங்கினோம். ஆனால், திமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் புகார்  தெரிவித்தனர்.

நிச்சயம் இந்த தேர்தல் முடிந்த பின் அதிமுக அரசு வழங்கும். எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகவரமுடியாது தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சிறுபான்மைமக்களுக்கு பாதுகாப்புமிக்க மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. ஆனால் இன்றைக்கு அரசியல் காழ்புணர்ச்சிகாரணமாக திமுகவும், இன்னொரு பக்கம் நம்மிடமிருந்து ய பிரிந்து சென்ற துரோகிகளும் பல்வேறு பொய்பிரச்சாரங்களை செய்கின்றனர். இந்த இயக்கத்தை அழித்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் தனியாக ஒரு இயக்கத்தை உருவாக்கியுள்ளனர்.

கழகத்திற்கு எதிராக தனிக்கட்சியோ, ஜாதிக்கட்சியோ தொடங்கியவர்கள் யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. ஏனென்றால் புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தை தொண்டர்களால் உருவாக்கினார். இது தொண்டர்கள் கட்சி. இன்றைக்கும் தொண்டர்களால் இயக்கப்படும் ஒருமாபெரும் இயக்கமாக இந்த இயக்கம் உள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கத்திற்கு வந்தசோதனைகளையும் வேதனைகளையும் தனதாக்கி கொண்டு, இந்த இயக்கத்தை அழிக்க நினைத்த கருணாநிதி சதிகளைஎல்லாம் முறியடித்து ஒரு அசைக்கமுடியாத எக்கு கோட்டையாக கழகத்தை உருவாக்கியுள்ளார்.

திமுகஆட்சிக்காலத்தில் பல்வேறு அராஜக செயல் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக நில அபகரிப்பை திமுகவே செய்தனர். தற்போது ஸ்டாலின் அதிமுக காணாமல்போய்விடும் என்று கூறி வருகிறார். இந்த இயக்கத்தில் ஒன்றரை கோடிதொண்டர்கள் உள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் ஆலமர விழுது போல் படர்ந்துள்ளனர். எப்படி காணாமல்போகும். அதிமுக அரசு  ஒவ்வொறு திட்டங்களையும் குறையில்லாமல் பார்த்து பார்த்து மக்களுக்கு சேவை செய்து வருகின்றது.” என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தில்அமைச்சர்கள் காமராஜ்,கே.டி.ராஜேந்திரபாலாஜி,கடம்பூா்ராஜூ,ராஜலட்சுமி,, விஜயபாஸ்கர்,சேவூர்ராமச்சந்திரன்,, மணிகண்டன்மற்றும் அதிமுக நிர்வாகிகள், கூட்டணிகட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com