Home செய்திகள் தென்னை மரத்திலிருந்து எடுக்கப்படும் ஊட்டச்சத்து மிகுந்த நீராபானம் வத்தலகுண்டு பகுதியில் அமோக விற்பனை..

தென்னை மரத்திலிருந்து எடுக்கப்படும் ஊட்டச்சத்து மிகுந்த நீராபானம் வத்தலகுண்டு பகுதியில் அமோக விற்பனை..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான வத்தலகுண்டு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, கட்டகாமன்பட்டி மற்றும் வைகை ஆற்று பாசனப் பகுதிகளான விருவீடு, அணைப்பட்டி, விளாம்பட்டி ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் மற்றும் இளநீர் விலை மிக குறைவாக உள்ளதால் இப்பகுதி தென்னை விவசாயிகள் தமிழக அரசு அனுமதியுடன் தென்னை மரத்திலிருந்து மதிப்பு கூட்டுப் பொருளான ஊட்டசத்து மிகுந்த நீராபானம் எனப்படும் பானத்தை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த பானமானது பனை மரத்தில் கல் இறக்குவது போல தென்னை மரத்தின் பூ பகுதியான பாலையிலிருந்து எடுக்கப்படுகிறது. பின்பு குளிர்ச்சியான ஐஸ் பெட்டிகளில் வைத்து விற்பனை செய்கின்றனர் இந்த இயற்கை பானத்தின் பயன்கள் ஏராளம்.

திண்டுக்கல் மற்றும் மதுரை கொடைக்கானல் நெடுஞ்சாலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை இப்பகுதி பொதுமக்கள் மற்றும் இன்றி கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளும் விரும்பி வாங்கிப் பருகிச் செல்கின்றனர் இதனால் விற்பனை கலைகட்டியுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!