தரமில்லாத அங்கன்வாடி மையம்… மழலையர்கள் உயிருக்கு ஆபத்தான நிலை..

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சி 2வது வார்டு A.V பட்டியில் 650000 ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கடந்த 15.01.19ல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.திறந்துவைத்து இரண்டு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் கட்டிடத்தின் பல பகுதிகளில் மிகப்பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தரமில்லாத கட்டிடம் இடிந்து விழுந்து தங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். வருகை குறைவினால் தங்கள் வேலை போய்விடும் குழந்தைகளை அனுப்பி வையுங்கள் என்று அங்குவேலை பார்பவர்கள் புலம்பி வருவதாகவும் தங்கள் வேலையை காப்பாற்றிக் கொள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிவோர் மற்றும் அதிகாரிகள் வருகை பதிவு கணக்கை தவறாக காட்டிவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பெரும்பாலும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் ஒன்றும் அறியாத குழந்தைகள் கல்வி மற்றும் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தரமில்லாத கட்டிடம் கட்டி மழலையர் பள்ளியை மரண பள்ளியாக மாற்றிய ஒப்பந்ததாரர் மற்றும் உடந்தையாக செயல்பட்டு பணம் கிடைத்த மயக்கத்தில் உள்ள அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..