தந்தை இறந்த சோகம் ரயில் முன் பாய்ந்து மகன் தற்கொலை…

இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்கு வரணி வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 62. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார் . பிப்ரவரி 8 ஆம் தேதி இரவு கடலை தோட்டம் சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

இவரது உடல் அடக்கத்திற்காக சிங்கப்பூரில் இருந்து இவரது மகன் பிரசன்னா (25) ஊர் திரும்பினார். இந்நிலையில் தந்தை இறந்த சோகத்தில் இருந்த பிரசன்னா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply