20/12/2018 முதல் 02/01/2019 வரை ரத்தாகும் ரயில்கள்..

பாம்பன் ரயில் பாலம் பலப்படுத்தும் பணிகளுக்காக மதுரை – ராமேஸ்வரம் ரயில்வே பிரிவில், ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

 1. மானாமதுரை – ராமேஸ்வரம் பிரிவில் இயக்கப்படும் அனைத்து சாதாரண பயணிகள் ரயில்களும் 20.12.2018 முதல் 02.01.2019 வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

2. வண்டி எண் 16779/16780 திருப்பதி -ராமேஸ்வரம் – திருப்பதி வாரம் மும்முறை விரைவு ரயில் 22.12.2018 முதல் 02.01.2019 வரை மதுரை -ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

3. வண்டி எண் 22622/22621 கன்னியாகுமரி -ராமேஸ்வரம் – கன்னியாகுமரி வாரம் மும்முறை விரைவு ரயில் 22.12.2018 முதல் 02.01.2019 வரை மதுரை – ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

3.வண்டி எண் 56734/56735 மதுரை – செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் 2018 டிசம்பர் 20, 22, 23, 24, 26, 27, 29, 30, 31 மற்றும் 2019 ஜனவரி 2 ஆகிய தேதிகளில் மதுரை – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

4. வண்டி எண் மதுரை – பழனி  – மதுரை பயணிகள் ரயில்கள் 20.12.2018 முதல் 02.01.2019 வரை மதுரை – கூடல்நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்.

To Download Keelainews Android Application – Click on the Image

July Issue…

July Issue…