வேலூர் தபால் நிலைய வளாகத்தில் உள்ள கடவுச் சீட்டு (Pssport Office) அலுவலகம் சாதனையா??.. வேதனையா?..

வேலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் தலைமை தபால் நிலைய கடவுச் சீட்டு சேவை மையம் (passport Office)ஒரு வருடமாக செயல்பட்டு வருகிறது இங்கு பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது மற்றும் புதுபித்தல் உள்ளிட்ட சேவைகளை பெற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர்

இந்த மையத்திற்கு  வயதானவர்கள், பெண்கள்,  சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த  அழுத்த நோயாளிகள், குழந்தைகள் என பல் வேறு மக்கள் வருகை புரிகிறார்கள்.  இச்சேவையை எளிமையாக்க உண்டாக்கப்பட்ட இம்மையம் மக்களை மிகவும் சிரமத்துக்கு ஆளாக்குகிறது.

இங்கு வரும் மக்கள் பல மணி நேரம் காக்க வைக்கப்படுகின்றனர். அங்கு வரக்கூடியவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வசதியில்லாமல் அவதிபடும் காட்சி மிகவும் வேதனைக்குரியதாகும். மேலும் கடவுச்சீட்டு சேவை மையத்தினுள் கழிவறை வசதிகள் இருந்தும் அங்கு வரும் பொது மக்களை  பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதில்லை என்பது மனிதாபிமானம் இல்லாத செயலாகும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் குறை தீர்க்க நடவடிக்கை எடுப்பார்களா??

Be the first to comment

Leave a Reply