துபாயில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி ..

இன்று தேரா துபாய் எக்ஸ்சல்சியர் ஹோட்டலில் டாக்டர் தொல்.திருமாவளவன் எழுதிய “அமைப்பாய் திரள்வோம்” என்ற புத்தகத்தின் திறனாய்வு கூட்டம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது..

இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் “அமைப்பாய் திரள்வோம்” புத்தகத்திற்கு அரசியல் விமர்சகர் குறிஞ்சிநாதன் மதிப்புரை வழங்கினார்.

மேலும் இந்த புத்தகம் அடக்குமுறைக்கும் ,அநீதிக்கும்
எதிராக அமைப்பாய் திரள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சமகால அரசியல் நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதப்பட்ட புத்தகம் என்பதால் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழ் மாநில தலைவர் வசீகரன் மற்றும் எழில் கரோலின், இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர். பிறகு பொன்னாடை போத்தி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியை வளரும் பெண் எழுத்தாளர் ஜெஸிலா பானு தொகுத்து வழங்கினார்.

Be the first to comment

Leave a Reply