பயணம்-8, பயணங்களும், பாடங்களும் தொடர்கிறது…

முன்னுரை:-

பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர்.  ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும்.  இன்று முதல் இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு வர உள்ளது.  உங்களுடைய கருத்துக்களை கட்டுரையின் ஆசிரியரை  9443440950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

பயணிக்கவேண்டும். உலகின் சிலபகுதிகளை நேரில் கண்டு ரசிக்கவேண்டும். அதன்புனிதப் பகுதிகளில் கால் பதிக்கவேண்டும்.  ஏராளமான நபிமார்கள் வாழ்ந்து மரணித்து அடக்கப்பட்டு இருக்கிற பாலஸ்தீன பகுதிகளையும் , பைத்துல்முகத்தஸ் பகுதிகளின் புனிதங்களையும் அறிந்து கொள்ளவேண்டும்.

பாலஸ்தீன் இஸ்ரேலாக மாற்றப்பட்டதையும், இஸ்ரேலின் சூழ்ச்சிகளையும்,  இஸ்ரேலின் வலிமையையும்,  அறிந்து கொள்வது அவசியமாகிறது. இஸ்ரேலின் உளவுபார்த்தல் என்பது ஒருதுல்லிய ஏற்பாடு. இஸ்ரேலின் பெரிய பலமும், அதன் உளவு அமைப்பான மொசாத்தின் துல்லியமும் அறிந்து கொள்ளப் படவேண்டியவை.  உளவுத்தகவல்கள் மூலம் தங்களது கொள்கைகளையும் செயல்பாடுகளையும் நாடுகள் கட்டமைக்கின்றன.

ஒருநல்ல அரசனுக்கு உளவுத்துறை மிக அவசியம் என்பதை வள்ளுவர் பேசுகிறார். பழங்கால மன்னர்கள் அனைவர்களிடமும் சிறந்த உளவாளிகளை வைத்திருந்தனர்.  பலவேடங்களில் அந்தந்த பகுதிகளில் ஊடுறுவி தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது  உளவுத்தகவல்களை திரட்டித் தரும் உளவாளிகள் உள்ளனர்.

இன்றைக்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட காலத்தில் கண்எதிரிலேயே உளவாளிகள் தங்களை வெளிப்படுத்தாமல் உலவுகின்றனர். பல வகை நவீன கேமராக்கள் மைக்குகள் பதிவிடும் கருவிகள் லேசர் உபகரணங்கள் நவீன ஆயுதங்கள் என்று உளவாளிகளின் தொழில்நுட்பம் விரிவடைந்திருக்கிறது. உளவுத்தகவல்களை ஒருநாட்டின் தொழில்நுட்பங்களை ஆயுதரகசியங்களை இன்றைக்கு சர்வசாதாரணமாக  பெரிய பதவிகளிலுள்ள அதிகாரகள் பெரும் பொருளாதாரங்களை பெற்றுக்கொண்டு அடுத்த நாட்டிற்கு விற்பனை செய்து  விடுகிறார்கள்.

உளவுத் திருட்டுக்கள் இன்று ஒருதொழிலாகவே கொடிகட்டிபறக்கின்றன ஒருநாட்டின் ரகசியத்தை  அந்த நாட்டின் மக்களை வைத்தே திருடுவது ஒரு கலையாக இன்று உருவெடுத்துள்ளது.  மாட்டிக் கொண்டால் மிகுந்த சித்ரவதைசெய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். உலகநாடுகளின் உளவுத்துறைகள் தனது எதிரிநாடுகளின் நிம்மதியை தொலைக்க செயல்படுகின்றன.

உளவு அமைப்புகளில் அமெரிக்காவின் CIA,  பாகிஸ்தானின் ISI, இந்தியாவின் RAW,  இஸ்ரேலின் மொசாத் என்று பல முன்னணி உளவுநிறுவனங்கள் உள்ளன. இஸ்ரேலில் 1949ஆம்ஆண்டு துவங்கப்பட்ட மொசாத்  உளவு நிறுவனம்  டெல்அவி நகரில் 1200 நபர்களுடன் இயங்குகிறது. இது சுயமாக இயங்கும் அமைப்பல்ல. இஸ்ரேலிய அரசின் கட்டளைப்படி செயல்படுகிறது.  இதன் பயிற்சிகள் பிரமிப்பானவை. உலகம் முழுதும் தனது வலைப் பின்னலை வைத்துள்ள மொசாத்தின் உதவிகளை ஆலோசனைகளை சில நாடுகள் கேட்டுப்பெறுகின்றன. இது அதன் வலிமையை நமக்கு உணர்த்துகிறது. இஸ்ரேல்நாட்டின் உளவுத்துறையான மொசாத் உலகின் உளவுத்துறைகளில் முதலிடத்தை பிடிக்கிறது.  மொசாத் தங்களின் மதி நுட்பமிக்க செயல்பாடுகளாலும்  செய்திகளின் வலை பின்னல்களாலும் உலகையே மிரள வைத்துள்ளது. மொசாத்தின் ஆலோசனைகளையும் உதவிகளையும் நாடாத நாடு இல்லை எனசொல்லுமளவுக்கு மொசாத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

உங்கள் வீட்டின் அருகில் வசிப்பவர்கூட  மொசாத்தின் உளவாளியாக இருக்கலாம் என்ற அளவுக்கு அவர்களின் வலைப்பின்னல் அமைந்துள்ளது. அமெரிக்காவில் யூதர்களின் முதலீடே குவிந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் அளவிற்கு யூதர்களின் பொருளாதார பலம் உள்ளது. உலகத்தை கட்டுப்படுத்தி தங்களது ஆதிக்கத்தை உலகத்தில் நிலைநிறுத்தும் அளவிற்கு யூதர்களின் கைகள் வலுவாக உள்ளது.

உலகின் எல்லா முன்னணி தொழில்களும் ஏறக்குறைய 80%ஊடகங்களும் யூதர்களின் ஆதிக்கத்திலேயே  உள்ளது. உலகத்தின் கட்டுப்பாட்டை தங்கள் கைகளில் கொண்டு வரவே முயற்சித்து கொண்டுள்ளார்கள். கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவில் நுழைந்த ஆரியர்களும், யூதர்களும்  ஒரே இனத்தை சேர்ந்தவர்கள்  என்பது மனிதகுல ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

தொடர்ந்து பேசுவோம்..!

இறைவன் நாடட்டும்..!

கப்ளிசேட்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal