தூத்துக்குடி மாவட்டம் வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்…

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் உள்ள நீர் நிலைகளை தனியார் காற்றாலை நிறுவனம் ஒன்று ஆக்கிரமித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்கு சில அதிகாரிகளும் துணைபோவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழக விவசாயிகளை வடமாநில தனியார் காற்றாலை நிறுவனத்துடன் சேர்ந்து கொண்டு வடக்கு இலந்தை குளத்தை சேர்ந்த சிலர் விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் விவசாயிகளையும் நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகளை ஏற்று கயத்தார் தாலுகா
வடக்கு இலந்தை குளம் கிராமத்தில் தனியார் கற்றாலை நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்த நீர்நிலைகள் கயத்தார் தாசில்தாரால் 11/10/18 இன்று அகற்றப்பட்டு விவசாய நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றும் போது கயத்தார் தாசில்தாருடன் தமிழ் விவசாயிகள் சங்க மாநிலதலைவர் OA.நாராயணசாமி-தூத்துக்குடி,
வடக்கு மாவட்டதலைவர் நடராஜன், மாநில துணைத்தலைவர் நம்பிராஜ், மாவட்டசெயலாளர் கம்பூர் துரை, ஊத்துப்பட்டி கனகராஜ் மற்றும் விவசாய சங்க பிரதிநிகள் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் அவர்களுக்கு விவசாயிகள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

தகவல்:-அபுபக்கர்சித்திக்

செய்தி:-அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர்
கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image