சார்ஜாவில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை சர்வதேச புத்தக கண்காட்சி – தமிழுக்கு தனி அரங்கு..

ஐக்கிய அரபு அமீரகத்தில் வருடந்தோரும் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும். இக்கண்காட்சியில் உலகத்தில் உள்ள தலைசிறந்த பதிப்பகங்கள் தங்களின் படைப்புகளை மக்களின் பார்வைக்கு வைப்பார்கள். கடந்த வருடம் இப்புத்தக கண்காட்சியில் தொன் மொழியாம் தமிழ் மொழி புத்தகத்தை விற்பனை செய்யவும், அரங்கம் அமைக்கவும் யாரும் முன்வரவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. இ்நத வருடம் அந்த ஆதங்கத்தை போக்கும் வகையில் டிஸ்கவரி புக் பேலஸ், வம்சி, தடாகம் மற்றும் சிக்ஸ்த் சென்ஸ் போன்ற தமிழ் பதிப்பகங்கள் பங்கேற்பதுடன், தமிழ் புத்தகங்களுக்கென பிரத்யேக அரங்கம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கதாகும்.

இந்த சர்வதேச புத்தக கண்காட்சி சார்ஜாவில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கில் நடைபெறும். இந்த முக்கிய நிகழ்வில் அனைத்து தழிழ் மக்களும் கலந்து கொள்ளும் படி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..