Home செய்திகள் கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் கல்லூரி அரபிதுறை சார்பாக பயிற்சி பட்டறை…

கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் கல்லூரி அரபிதுறை சார்பாக பயிற்சி பட்டறை…

by ஆசிரியர்

கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் கல்லூரி அரபிதுறை சார்பாக “அரபு மொழியை தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் உலகமயமாக்க்கல்” என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை 26/09/2018 முதல் 29/09/2018 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் A.E.G.C ரஜினி, தலைவர் வணிகவியல் துறை தலைவர் முன்னிலையில், BA ARABIC முதலாமாண்டு மாணவி ஹலிஃபத் ஜுஹைனா கிராத் ஓத, அரபுத் துறைத் தலைவர் எஸ்.நஸீமா பர்வீன் வரவேற்புரையுடன் தொடங்கியது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கான்ஸார்ப்ட், மலேசிய இயக்கனர் நஸ்ருல்லாஹ்கான் கலந்து கொண்டு அரபு மொழியை எவ்வாறு அணுகுவது.?, எப்படி எளிதாக கற்று கொள்வது? என்பதை பற்றி பயிற்சி அளித்தார்கள்.

மேலும, இப்பயிற்சி பட்டறையில் கீழக்கரை பள்ளி மற்றும் மதரசா மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  நிகழ்ச்சி அரபுத்துறை துணைப் பேராசிரியை எம்ஃபாத்திமா சுரையா நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!