Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் …

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் …

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் விரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ வீரராகவ ராவ் வெளியிட்டார். மாசில்லா தமிழ்நாடு என்னும் இலக்கை அடைய ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, ராமேஸ்வரம் நகராட்சிகள், ராமநாதபுரம், மண்டபம், பரமக்குடி, திருப்புல்லாணி, கடலாடி, கமுதி, முகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில், திருவாடானை, போகலூர் ஊராட்சி ஒன்றியங்கள், மண்டபம், தொண்டி, ஆர்.எஸ். மங்கலம், சாயல்குடி, கமுதி, முதுகுளத்தூர், அபிராமம் பேரூராட்சிகள் மற்றும் 429 ஊராட்சிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், பாலீத்தின் பை பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பாலீத்தின், பிளாஸ்டிக் பொருட்களை நாம் பயன்படுத்த மாட்டோம் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பொதுமக்களுடன் இனணந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மனுக்களை உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் உறுதியளித்தார்.

இக்கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தணிக்கை) பாலநரசிம்மன், தாசில்தார்சிவக்குமார், தேர்தல் தாசில்தார் தியாகராஜன், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, சித்ரா, வருவாய் ஆய்வாளர் சசிகலா, கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரன், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!