இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கம் சார்பில் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. இராமநாதபுரம் பட்டணம் காத்தான் அவின்கோ மகாலில் நடந்த விழாவிற்கு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கத் தலைவர் ஜெ.தினேஷ் பாபு தலைமை வகித்தார். துணை ஆளுநர் ஆர் வி எஸ் பார்த்தசாரதி, முன்னாள் துணை ஆளுநர்கள் எம்.சாதிக் அலி, எம். அமலன் அசோக் முன்னிலை வகித்தனர். செயலர் எம். பாபு வரவேற்றார். சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருதுகளை ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் ஜெ. நவமணி வழங்கினார். முன்னாள் துணை ஆளுநர் ஜெ. சுகுமார், உறுப்பினர் ஏ.செங்குட்டுவன், அரசு டாக்டர் செ. பாலசுப்ரமணியன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நானா (எ) நாகரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இவ்விருதுகள் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியரும், எலைட் பள்ளி ஒருங்கிணைப்பாளருமான நல்லாசிரியர் எஸ்.நவநீதகிருஷ்ணன், செய்யது அம்மாள் பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு) டி.முத்துச்சாமி, ஆசிரியர் (ஓய்வு) ஏ. சாதிக் அலி, சுந்தரமுடையான் அரசு உயர் பள்ளி தலைமை ஆசிரியை எம்.மணிமேகலை, தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் ஜி.முத்துக்குமார், எம்.ஜி.. மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆர். லலிதா சங்கரி, வாணி வேலு மாணிக்கம் மான்டிசோரி மெட்ரிக்., பள்ளி முதல்வர் ஏ. பரிமளா, திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியை வி.கிருஷ்ணவேணி, திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரும், தொல்லியல் ஆராய்ச்சியாளருமான வி.இராஜகுரு, பரமக்குடி ராஜா சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியரும், ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளரும், மாநில அளவில் பல்வேறு விருதுகள் பெற்ற எஸ்.அய்யப்பன், சங்கந்தியான் வலசை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கே.ஆர்.செல்வி, பேராவூர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கே.காளீஸ்வரி, வைரவன் கோவில் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் எஸ்.சத்குரு குமார், தேவிபட்டினம் துவக்கப்பள்ளி இடை நிலை ஆசிரியை கே.முருகவேணி, வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் செல்ல வேட்டையன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம். ——————————————————————
You must be logged in to post a comment.