கீழக்கரை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு.. பல மாற்றங்கள் உருவாகும் என எதிர்பார்ப்பு..

ரோட்டரி கிளப் உலகம் முழுவதும் கட்டு கோப்பான அமைப்பாக இயங்கி வருவதுடன், வசதி படைத்தவர்கள் மட்டுமே பதவிக்கு என்று இயங்கி வரும் சர்வதேச அமைப்புகளுக்கு மத்தியில் மக்களுக்கு சேவை செய்யும் சாமானிய மனிதனும் தலைமை பதவிக்கு வரலாம் என்ற அடிப்படையில் இயங்கி வரும் அமைப்பாகும்.

அதன் சித்தாந்தத்தின் அடிப்படையில் 12-07-2018 அன்று கீழக்கரை ரோட்டரி கிளப்பின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்று கொண்டார்கள்.  புதிய தலைவராக அப்பா மெடிகல் சுந்தரம், செயலாளராக செய்யது முகம்மது ஹசன் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். இந்த நிகழ்வு கீழக்கரை சே.மூ.மீ மஹாலில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் சேக் சலீம் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதிவி பிராமணம் செய்து வைத்தார்.  மேலும் சிறப்பு பேச்சாளராக துரை பாண்டியன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதி பாராட்டு நிகழ்வை ரோட்டரி சார்டர் தலைவர் அலாவுதீன் பொறுப்பேற்று நடத்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அதே போல் புதிய நிர்வாகிகளின் பதவியேற்புக்கு முன்னோட்டமாக பொதுமக்களுக்கு பயன் பெறும் வகையில் கீழக்கரை முக்கு ரோடு மற்றும் அகஸ்தியர் கோயில் பகுதியில் வாகன ஓட்டிகள் நலன் கருதி பல ஆயிரம் செலவில் எச்சரிக்கை ஒளி விளக்கு நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.