தமிழக அரசு பொன் விழா ஆண்டு கலை போட்டிகள் அறிவிப்பு..

சென்னை மாகாணம் என அழைக்கப்பட்ட நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு ‘தமிழ்நாடு பொன் விழா ஆண்டு’ விழா கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, தமிழ் வளர்ச்சித்துறை, கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய சார்பில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்டம், மாநில அளவிலான போட்டிகள் நடத்தி பரிசு, சான்றிதழ்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கலை பண்பாட்டு துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் ஜூலை 14 அன்று மாவட்ட அளவிலான நடனம், தமிழிசை வாய்ப்பாட்டு, பரதம், (பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்) போட்டி நடைபெறவுள்ளது. போட்டிகளில் 15 வயது முதல் 30 வயது நிரம்பியோர் பங்கேற்கலாம். மாணவ, மாணவிகள் மற்றும் தொழில் முறை கலைஞர்கள் பங்கேற்கலாம். முதல் மூன்று பரிசு பெறுவோர் மாநில கலைப்போட்டியில் பங்கு பெறலாம். மாநில அளவில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் போட்டி நடைபெறும் நாளான்று மாவட்ட அரசு பள்ளிக்கு காலை 9 மணிக்கு நேரில் வந்து பெயர் பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94449 49739, 90036 10073 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.