Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் விரைவில் வரும் அமைச்சர் மணிகண்டன் உறுதி!

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் விரைவில் வரும் அமைச்சர் மணிகண்டன் உறுதி!

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் விரைவில் வரும் என இருமேனி இஸ்லாமிய இளைஞர் அமைப்பு நடத்திய மாநில அளவிளான ஐந்தாம் ஆண்டு கைப்பந்து போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் மணிகண்டன் உறுதி அளித்தார். மேலும் அவர் பேசியதாவது’” இராமநாதபுரம்  சட்டமன்ற தொகுதி சீனியப்பா தர்ஹா வில்       கடந்த 2013 ல் அம்மா அறிவித்த திட்டத்தினை நிறைவேற்றும்   வகையில்  கடல் அரிப்பு  தடுப்புச்சுவர்   சுமார்  7 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.   மாவட்டத்தில் பெண்களுக்கு   அம்மா இருசக்கர வாகனம் வழங்ப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இராமநாதபுரம் மாவட்டத்தினர் அதிகளவில் வசித்து வருவதால் உச்சிப்புளியில் விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். அதே கோரிக்கையை நமது முதலமைச்சரும் வலியுறுத்தியுள்ளார்.  ஆகவே விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும்.   உச்சிப்புளியில் இரயில் நிற்க பல முறை ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.   மண்ணில் உள்ள உயிர்களை எவனொருவன் காக்கின்றானோ அவரை விண்ணில் உள்ள இறைவன் காப்பான் என்ற  நபிகள் நாயகம் கோட்பாடு களை மனதில் வைத்துத்தான் நாங்கள் பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். சுமார் 32 ஆயிரம் விலையில்லா மடிக்கணினி வழங்கியுள்ளோம்.    64 கண்மாய்களை தூர் வாரி 40 கண்மாய்களில் நீரினை நிரப்பியுள்ளோம்.    இராமநாதபுரத்திற்கு அனைத்து மக்களுக்கும் நல்ல மருத்துவம் கிடைக்க மருத்துவக்கல்லூரி அவசியம் கொண்டு வரப்படும். மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தை வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றும் வரை எனக்கு ஓய்வில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

 

விழாவில் அமைச்சர்  டாக்டர்   மணிகண்டன்  வெற்றி பெற்ற வேதாளை அணிக்கு முதல்பரிசு வழங்கி பாராட்டினார்.  இருமேனி இஸ்லாமிய இளைஞர் அமைப்பு சார்பில்     நசீர் இஸ்மாயில் வரவேற்றார். அப்துல் ஹக், பஷீர்அலி ஆகியோர் விழாவினை தொகுத்து வழங்கினர். கமிட்டி தலைவர் சேக்சபாருதீன் முன்னிலை வகித்தார். நஸ்ருதீன் நன்றி கூறினார்.  விழாவில் முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் தொகுதி செயலாளர் தஞ்சி சுரேஷ், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சந்திரன்,  நகர் அம்மா பேரவை முத்துப்பாண்டி, நகர் இளைஞரணி காளிதாஸ், ராம்கோ தொழிற்கங்க மாவட்ட செயலாளர் சேதுபதி, புலவர் சித்திக், பெருங்குளம் ஊராட்சி கழக செயலாளர் ஜானகிராமன், கடலாடி ஒன்றிய துணை செயலாளர் சண்முகபாண்டியன், சுப்புத்தேவன் சோமசுந்தரம், உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!