Home அறிவிப்புகள் ரூபாய் நோட்டு – நாணயங்களில் உள்ள நுண்கிருமிகளால் நோய் பரவும் அபாயம்…உணவகங்கள் கவனமாக இருப்பது அவசியம்..

ரூபாய் நோட்டு – நாணயங்களில் உள்ள நுண்கிருமிகளால் நோய் பரவும் அபாயம்…உணவகங்கள் கவனமாக இருப்பது அவசியம்..

by ஆசிரியர்

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது.  அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ரூபாய் நோட்டுகளை எச்சில் வைத்து எண்ணுவது, இவ்வாறான அழுக்கு படிந்த நோட்டுகளை பயன்படுத்துவதால் அதிலுள்ள நுண்கிருமிகள் மூலம் உணவு நஞ்சாதல், வயிறு, சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன.  மேலும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு நோய் எளிதாக தொற்றிக் கொள்ளும்.

மேலும் உணவகங்களில், குறிப்பாக சாலையோர கடை வைத்திருப்பவர்கள் பல  விதமான மக்களிடம் இருந்து வாங்கும் கைகளினாலே உணவும் பறிமாறுவதால் நுண்கிருமிகள் மூலம் நோய்கள் அதிகமாக பரவுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
ஆகையால் உணவகங்கள் வைத்திருப்பவர்கள், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பெற்றுக் கொள்ளும் கையாலே உணவு பறிமாறுவதாக இருந்தால் கைகளை சுத்தமாக கழுவிவிட்டு உணவுகளை பறிமாற வலியுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இது சம்பந்தமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது, என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!