இராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தின விழா பேரணி நடைபெற்றன…

உலகமெங்கும் யோகா தினம் ஜூன் 21ல் நடைபெறுவதை முன்னிட்டு இராமநாதபுரம் நகரில் பல்வேறு இயக்கங்கள் இணைந்து நான்காம் ஆண்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியது.  இதில் மூவாயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணி டேர் பவுண்டேஷன் மற்றும் மனவளக்கலை மன்றம் சார்பில் துவங்கப்பட்டு, பேரணி கேணிக்கரையில் ஆரம்பித்து அரண்மனையில் நிறைவடைந்தன.

பின்னர் பள்ளி மாணவ, மாணவிகள் யோகா கலையை செய்து தங்கள் திறமையை காண்பித்தனர். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் நடிகர் விசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில, சிறப்பாக பணியாற்றிய அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து சேவா பாரதி தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆடல் அரசன் வரவேற்புரையாற்றினார்.  வேல்மருத்துவமனை மருத்துவர் மலையரசு, வழக்கறிஞர் சங்க தலைவர் ரவி சந்திரராம்,  வன்னி அன்னை கண் மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகரன்,  பா.ஜ.க  இராமேஸ்வரம் முரளிதரன்,  தாசீம் பீவி கல்லூரி முதல்வர் சுமையா தாவூது ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் தொடர்வாக டேர் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் யோக தின அறிவுரை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் வாழும் கலை ஈஷா யோகா, தமிழ்நாடு யோக சங்கம், ஞானதீபசங்கம், இஸ்கான் மாதா அமிர்தானந்தயி மடம்,  ரோட்டரி சங்கம்,  லயன்ஸ் சங்கம், தமிழ் சங்கம், சேவா பாரதி நேரு யுவாகேந்திரா,  ஏகல் வித்யாலயா, பாரதீய யுவமோர்ச்சா, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம், சாரதா சேவா சமாதி,  ரஜினி மன்றம், விவேகாநந்த வித்யாலயா, ஏ.வி எம்.எஸ் மேல்நிலை பள்ளி, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி, தாசீம் பீவி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

1 Comment

  1. அனைவரும் ஒற்றுமையாக யோகா செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் எங்கும் எதிலும் ஒற்றுமை அவசியம். ..

Comments are closed.