கீழக்கரையில் ஈத் பெருநாளன்று சிறுமிகளை ஈவ் டீசிங் செய்த பிரச்சனையில் இரு தரப்பினரிடையே மோதல் – இருவர் படுகாயம்..பெருகி வரும் வன்முறை கலாச்சாரம்….

கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெரு பகுதியில் நேற்று முன் தினம் பிற்பகலில் சிறுமிகளை  ஈவ் டீசிங் செய்த பிரச்சனையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 16/06/2018 அன்று  ஈத் பெருநாளன்று பிற்பகலில் சேரான் தெருவை தேர்ந்த முஹம்மது நபீல் என்பவர் தன்னுடைய 12 வயது சகோதரியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பழைய மீன் கடை வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கஸ்டம்ஸ் தெருவை சேர்ந்த வாலிபர்கள் சிலர் முஹம்மது நபீலின் சகோதரியிடம் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட முஹம்மது நபீலை இரும்பு ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதனையடுத்து இரண்டு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ரம்சித் சில்மான் மற்றும் முஹம்மது நபீல் படுகாயம் அடைந்து இராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது ரம்சித் சில்மான் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கீழக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் ஊரில் பெருகி வரும் கஞ்சா தொழில் என்பதே பொதுமக்களின் பரவலான கருத்தாக உள்ளது.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..