Home செய்திகள் இலங்கையில் யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் கடும் முயற்சியால் அனைத்து தரப்பினரும் இணைந்து முள்ளி வாய்க்கால் நினைவு தினம் அனுசரிப்பு..

இலங்கையில் யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் கடும் முயற்சியால் அனைத்து தரப்பினரும் இணைந்து முள்ளி வாய்க்கால் நினைவு தினம் அனுசரிப்பு..

by ஆசிரியர்

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18 தேதி விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த நாள் வரை கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக நடை பெற்றது.

யுத்தத்தில் தாய்  தந்தை இருவரையும் முள்ளிவாய்க்காலில் இழந்த யுவதி கேசவன், விஜிதா பொதுச்சுடரேற்ற ஏனையவர்களும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். பல்வேறு முரண்பாடுகள் காணப்பட்டாலும் யாழ்பல்கலைக்கழக மாணவர்களின் கடும் முயற்சி காரணமாக அனைத்து தரப்பும் இணைந்து ஓரிடத்தில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சிறப்புற அனுஸ்ரிக்கப்பட்டது.

பொதுச்சுடரினை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.  விக்னேஸ்வரன் யுத்தத்தில் தனது தாய்  தந்தை இருவரையும் முள்ளிவாய்க்காலில் இழந்த யுவதி கேசவன் விஜிதாவிடம் கையளிக்க  பொதுச்சுடரேற்ற ஏனையவர்களும் சமநேரத்தில்  சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மத தலைவர்கள் சிவில் சமூக அமைப்புக்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்காணவர்கள் கலந்துகொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!