Home செய்திகள் எதிலும் வித்தியாசம் காட்டும் இஸ்லாமியா பள்ளி..

எதிலும் வித்தியாசம் காட்டும் இஸ்லாமியா பள்ளி..

by ஆசிரியர்
பள்ளிக்கூடம் என்பது பாடத்தை மட்டும் போதிக்க கூடிய இடம் அல்ல, ஆனால் வாழ்கை அறிவையும் புகட்டி, எதிர்கால வாழ்கையை மேம்படுத்தும் கலையை போதிக்கும் தலம் ஆகும்.
விஞ்ஞான வளர்ச்சியும், டிஜிட்டல் காலம் உருவாகுவதற்கு முன்பு, மாணவர்கள் வருட கணக்கில் குருகுலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு உலக கல்வியோடு, அறிவுத்திறன் வளர்க்கும் கல்வியும் போதிக்கப்படும். ஆனால் காலப்போக்கில் விஞ்ஞானம் வளர்ந்ததோடு கல்வியறிவறிவு என்பதை மறந்து போட்டியும், பொறாமை மட்டுமே மிஞ்சியது.  புதிய தலைமுறை மக்களும் பள்ளயில் படிக்கும் பாடமும், அதில் எடுக்க கூடிய மதிப்பெண்கள் மட்டுமே முக்கியம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டனர், பள்ளிகளும் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாக வைத்து மாணவர்களை உருவாக்கினர்.
ஆனால் சில பள்ளிகள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வியறிவு மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கு தேவையான உலக கல்வியை வழங்குவதிலும் மும்முரம் காட்டுகின்றனர். அதையும்  தாண்டி அதற்கான அனைத்து வசதிகளை செய்து கொடுத்ததுடன், அதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களையும் கவுரவப்படுத்தினர்.
அந்த வரிசையில் இந்த வருடம் இஸ்லாமியா பள்ளியில் அனைத்து வகையான செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் ஆறு குழந்தைகளின்   பெற்றோர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு  சிறந்த பெற்றோர்கள் என்ற விருதை வழங்கினர்.  அவ்வரிசையில் இந்த வருடம் பழைய குத்பா பள்ளி தெருவைச் சார்ந்த பரக்கத் அலி மற்றும் சியானா தம்பதிகளுக்கும், இன்ன பிற ஐந்து பெற்றோர்களுக்கும் விருது அளிக்கப்பட்டது.
இது போன்ற செயல்பாடுகள் விருது பெற்றவர்களுக்கு ஊக்கமாகவும், அதே சமயம் மற்ற பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளையும் கல்வியறிவோடு மற்ற உலக கல்வியையும் போதிக்க ஒரு உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

TS 7 Lungies

You may also like

1 comment

Sadiq M J April 23, 2018 - 11:25 pm

Great, Congrats to Parents and Best Wishes to Islamiah Management as well as Principal, Teachers and All Staff

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!