கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக நடைபெற இருக்கும் மார்க்க விளக்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை KECT சார்பாக மார்க்க விளக்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி எதிர்வரும் 20.04.2018 தேதியன்று வெள்ளிக்கிழமை புதுக் கிழக்குத் தெருவில் இருக்கும் மஸ்ஜிதுத் தக்வா பள்ளி திடலில் நடை பெற இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ‘முன் மாதிரி இஸ்லாமிய குடும்பம்’ என்கிற தலைப்பில் தொண்டி அல் மதரஸத்துல் அஷ்ரபியா முதல்வர் நிலாமுதீன் ஆலீமும், ‘நபி வழியை அறிந்து நடப்போம்’ என்கிற தலைப்பில் இஸ்லாமிய அழைப்பாளர் அப்பாஸ் அலி ஆலிமும் சிறப்புரை ஆற்றுகின்றனர்.