அம்பேத்கரும் தப்பவில்லை காவி மயத்தில் இருந்து…

கடந்த சில மாதங்களாகவே உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை சம்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சியாளர்களே தவறான வகையில் சட்டத்தை கையாள்வதால், சாமானிய மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.

இந்நிலையில் எந்த திசையில் நோக்கினாலும் “காவி மயம்” என்று சொல்லும் வகையில் அனைத்திலும் காவி சித்தாந்தம் திணிக்கப்பட்டு, காவி நிறம் பூசப்பட்டு வருகிறது. அரசு கட்டிடங்கள் தொடங்கி ,போக்குவரத்து வாகனங்கள், மின் கம்பங்கள் என அனைத்திலும் காவிநிறம், ஆனால் நிறம் மாறினாலும் மனம் மாறாது என்பதை ஆட்சியாளர்கள் மறந்து விட்டார்கள்.

முப்பது கோடி முகமுடையாள் என்ற பாடலுக்கு சொந்தமான இந்திய திருநாட்டில், பன்முக தன்மை சமுதாயத்தை கொண்ட நம் நாட்டில், சகோதரத்துவத்துடன் வாழும் மக்கள் மத்தியில் இந்துத்துவா கொள்கையை புகுத்துவதன் மூலம் பிரிவினைவாதத்திற்கு இது ஒரு தூண்டுகோளாக அமையுமோ? என்று மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இது போன்ற அசாதாரண சூழலுக்கு தீணி போடும் வகையில் அரசியல் மற்றும் ஜாதி தலைவர்கள் சிலைகளும் அவ்வப்போது உடைக்கப்பட்டுவதும், பின்னர் சிலையை பாதுகாக்க இரும்பு கூண்டில் வைப்பதும் வக்கிரத்தின் உச்சத்தை காட்டுகிறது.

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் தந்தை, அரசியல் சட்டத்தை இயற்றிய மறைந்த சட்ட மாமேதை அம்பேத்கர் உலகம் முழுவதும் போற்றத்தக்க ஒருவராக இன்று வரை விளங்கக் கூடியவர். ஆனால் அவருடைய சிலகளே தொடர்ச்சியாக சேதப்படுத்தப்பட்டு வருவது சிறுபான்மையினருக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட அராஜக செயல்களாகவே பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு உத்திர பிரதேச மாநிலம் பாதாவுன் கிராமத்தில் அம்பேத்கர் சிலை சமூக விரோதிகளால் உடைப்பப்பட்டது. உடனே அதே இடத்தில் காவி வண்ணம் பூசிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. காவி நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலையின் புகைப்படங்கள் ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தீயாக பரவியது. ஆனால் பதட்டத்தை தடுக்கும் வகையில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியை சார்ந்த ஒருவர் காவி நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு காவல் துறை முன்னிலையில் நீல வர்ணம் பூசப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலை நீடித்தால் சிறுபான்மையினரின் உரிமை கேள்வி குறியாகவே மாறிவிடும்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..