கீழக்கரை அல் மத்ரஸத்துர் ராழியாவின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பாடதிட்டத்தின் கீழ் இயங்கும் அல் மத்ரஸத்துர் ராழியாவின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று (29.03.2018) இரவு 8:30 மணியளவில் இஸ்லாமிய கல்வி சங்க வளாகத்தில் நடைபெற்றது .

மத்ரஸாவின் ஐந்தாமாண்டு மாணவர் முஹம்மது ஸஃப்வான் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை ஆரம்பம் செய்தார். இந்த விழாவில் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் முஹம்மது சாலிஹ் ஹுஸைன், மதரஸாவின் முன்னாள் பேராசிரியர் பிலால் ரியாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அல் மத்ரஸத்துர் ராழியாவின் தாளாளர் அஜ்மல் கான், இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் நிர்வாகிகள் சகோதரர் முஹைதீன் அடுமை, அய்யுப் கான், முஹம்மது லாபிர் மத்ரஸாவின் ஆசிரியரகள் ஆலிம் நவ்ஸாத் அலி தாவூதி, ஆலிம் ஹுஸைன் மஸ்லஹி, ஆலிம் கஸ்ஸாலி சதகீ, ஆலிம் அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கிராஅத், பயான், வினாடி வினா, ப்ளாஷ் கார்டு, சொல் எழுத்து போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் தலைவர் சட்டப் போராளி ஆலிம் தவ்ஹீத் ஜமாலி அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்ரஸாவின் நிர்வாகிகள் சகோதரர் சட்டப் போராளி சல்மான் கான், முஹம்மது சுஹைல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். பரிசுகளை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.