கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் விடுமுறை முடிந்தும் ஆதார் ‘மய்யம்’ திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் பதிவு மய்யம் நேற்று (08.03.2018) வியாழக் கிழமை விடுமுறை என்பதாக திடீரென அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால் புதிய ஆதார் எண் பதிவு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம்ம் அலை[பேசி எண் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக நகராட்சி அலுவலகம் வந்திருந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் இன்று (09.03.2018) வெள்ளிக்கு கிழமையும் ஆதார் மய்யம் திறக்கப்படாததால் பொதுமக்கள் வீண் அலைச்சலுக்கு உள்ளானதோடு, பெரும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

இது குறித்து மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் சட்டப் போராளி பாதுஷா கூறுகையில் ”இது போன்று முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் பொதுமக்களை அலைக்கழிப்பு செய்வது கண்டனத்திற்குரியது. மூத்த குடிமக்கள், பெண்மணிகள், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளோடு ஆட்டோவுக்கு பணம் செலவழித்து நகராட்சிக்கு வந்து காத்து கிடந்து வேலை முடியாமல் திருப்பி செல்வது இனி வரும் காலங்களில் தடுக்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளோம்” என்று தெரிவித்தார்.