Home செய்திகள் மின்சார கேபிள் துண்டிப்பு இருளில் முழ்கிய ராமேஸ்வரம், +2 மாணவர்கள், சுற்றுலாபயணிகள் அவதி..

மின்சார கேபிள் துண்டிப்பு இருளில் முழ்கிய ராமேஸ்வரம், +2 மாணவர்கள், சுற்றுலாபயணிகள் அவதி..

by ஆசிரியர்

மண்டபம் அருகே மின்சார கேபிள் மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டதால் சுற்றுலாத்தலமான ராமேஸ்வரம் உட்பட 20 க்கும் மேற்ப்பட்ட மீனவக்கிராமங்கள் பத்து மணி நேரத்திற்கும் மேலாக இருளில் முழ்கியது. பொது தேர்வு எழுதும் மாணவர்கள் அவதியுற்று வருகின்றனர் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் மின்சாரம் பயன்படுத்த மின்சாரவாரியம் தடைவிதித்துள்ளது

மண்டபம் துணை மின் நிலையத்திலிருந்து இராமேஸ்வரம் செல்லும் உயர் மின் அழுத்த கேபிள் வயரை மண்டபம் அருகே ஜே.சி.பி இயந்திரம் மூலம் துண்டித்ததால் ராமேஸ்வரம் , பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் 20 க்கும் மேற்ப்பட்ட மீனவக்கிராமங்களில் இன்று பகல் 12 மணி முதல் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ராமேஸ்வரம் ,பாம்பன், மற்றும் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் துனை மின் நிலைய ஊழியர்கள் கேபிள் துண்டிக்கப்பட்ட இடத்தை கன்டுபிடிக்க சுமார் ஏழு மணி நேரம் முயற்சி செய்தும் பழுதான இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். தொடர் மின் தடையால் சுற்றுலாத்தலமான இராமேஸ்வரத்திற்கு வருகை புரிந்துள்ள சுற்றுலாபயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பிளஸ் 2 தேர்வு துவங்கியுள்ள நிலையில் மாணவ மாணவிகள்; மின்சாரம் இன்றி தேர்வுக்கு படிக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் இந்த மின் வெட்டால் நாளை நடக்க இருக்கும் தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எப்படி எழுத போகிறோம் என்ற அச்சத்தில் தீவு மாணவர்கள்; உள்ளனர் மின் தடையால் பொதுமக்களின் இயல்பு வாழ்ககை முற்றுலும் பாதிப்படைந்துள்ளது .

இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள் குறித்து மின்வாரிய ஊழியர்கள் முயற்சிகள் மேற்க்கொண்டு வருவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ராமேஸ்வரம் மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் மின்சார கேபிள் பூமிக்குள் பதிக்கப்பட்டுள்ளது. யாரோ ஜே சி பி இயந்திரம் மூலம் நிலத்தை சீரமைக்கும் போது கேபிள் துண்டிக்கப்பட்டுள்ளது, ஊழியர்கள் பல மணி நேரம் முயற்சித்தும் இதுவரை துண்டிக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை .அதனால் சென்னையிலிருந்து இதற்கான கருவி வரவழைக்கப்பட்டு பணியை துவங்க உள்ளோம், இன்னும் இரண்டு நாட்களுக்குள் பழுது முற்றிலும் சீரமைக்கபப்படும் என்றார். பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாபயணிகள் நலன் கருதி சீரான மின்சாரம் கொடுக்கும் வரை தங்கும் விடுதிகள் ஐஸ் கட்டி உற்பத்தி நிலையங்கள் மற்றும் வீடுகளில் ஏ.சி உள்ளிட்ட அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தப்படும் இடங்களில் மின்சாரம் உபயோகிக்க கூடாது எனவும் ஜெனெரேட்டர் மூலமாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!