
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் இறுதியாண்டு டிப்ளமா பயிலும் 435 மாணவ மாணவிகளுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா அல்ஹாஜ் டாக்டர், எஸ். எம். தஸ்தகிர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இவ்விழாவின் ஆரம்பத்தில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ. அலாவூதின் அனைவரையும் வரவேற்றுபேசினார். கல்லூரியின் அறக்கட்டளையின் தலைவர் எஸ் எம். யூசுப் தலைமையுரையாற்றினார், இயக்குனர் பி. ஆர். எல். ஹமீது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள்.
கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு முதன்மை ஒருங்கனைப்பாளரான சேக்தாவூத் வேலை வாய்ப்புக்கான 2018 ஆண்டு அறிக்கை வாசித்தார். கல்லூரியின் சிறப்பு விருந்தினராக கே, கருணாநிதி குரூப் மேலாளர், கே. மணிவன்னன் முதன்மை கல்வி அலுவலர் முகம்மது சதக் கல்லூரியின் கல்வி நிறுவனம், ஜப்பானிய மொழி ஆலோசகர் ஹிடஹாரி ஹையோடா ஆகியோர் கலந்து கொண்டு லுகாஸ் டி வி எஸ், மற்றும் அவலான் டெக்னாலஜி, டி வி எஸ், சுந்தரம் பயஃஸ்ட்னர்ஸ், அசோக் லேய்லேண்ட், போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் மூலமாக பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 435 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர். அப்பாஸ் மைதீன், கல்லூரி டீன் முகம்மது ஜஹாபர், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர். ரஜபுதீன் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் துறை தலைவர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் துணை முதல்வர் சேக்தாவூத் மற்றும் மரியதாஸ், இயந்தரவியல் துறை தலைவர் கணேஸ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.