செய்யது ஹமீதா அரபிக்கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் …

கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் செய்யது ஹமீதா அரபிக் கல்லூரியில் “அழிவின் விளிம்பில் இந்திய ஜனநாயகம்” என்ற தலைப்பின் கீழ் இன்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு செய்யது ஹமீதா கல்லூரியின் முதல்வர் அலி ஷா நூரானி ஹஜரத் தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து “ இஸ்லாமிய சட்டமும் இந்திய அரசியலும்” என்ற துணைத் தலைப்பின் கீழ் மாணவர் சமிவுல்லா தனது கருத்தை பதிவு செய்தார். “இந்திய ஜனநாயக பாதுகாப்பில் முஸ்லிம்களின் பங்களிப்பும் தியாகமும்” என்ற துணைத் தலைப்பின் கீழ் மாணவர் முகம்மது யாசின் தனது கருத்தை பதிவுசெய்தார். “ஜனநாயகத்தை தாக்கும் பாசிசம்” என்ற துணைத் தலைப்பின் கீழ் மாணவர் முஹம்மது ஹாரிஸ் தனது கருத்தை பதிவுசெய்தார்.

இறுதியாக மதுரை வக்பு வாரிய கல்லூரியின் பள்ளி வாசல் தலைமை இமாம் மௌலானா அப்துல் அஜிஸ் வாஹிதி “அழிவின் விளிம்பில் இந்திய ஜனநாயகம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.