நல் உணவே மருந்து.. உணவுக்கு வழிகாட்டும் MYFA அமைப்பு…

கீழக்கரை புதுத்தெரு MYFA சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேவையுடைய குடும்பங்களின் மாதாந்திர உணவுத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதாந்திர உணவுத் திட்டம் மூலம் சுமார் 70 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்த உணவு திட்டம் சம்பந்தமாக MYFA சங்க செயலாளர் பாதுஷா கூறியதாவது, ”இந்த திட்டமானது கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக நடத்தி வருகின்றோம். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்குகிறோம்.

மேலும் இந்த திட்டத்தில் தெற்கு தெரு மற்றும் புதுத்தெரு சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் கண்டு பொருட்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் புதுத்தெரு மட்டுமல்லாமல் பிற தெரு மக்களும் பயனடைந்து வருகிறார்கள். இத்திட்டத்தின் மூலம் சில பிற சமுதாய மக்களும் பயன் பெறுகிறார்கள்” என்றார்.

இவ்வமைப்பின் பணி மென்மேலும் சிறக்க கீழை நியூஸ் நிர்வாகமும் வாழ்த்துகிறது.

—————————————-

Comments are closed.