பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவர்களை சீர்திருத்த பள்ளியில் சேர்த்துவிட கீழக்கரை SDPI கட்சி கோரிக்கை ..

கீழக்கரையில் நேற்று (02-12-2017) நடந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் 14மணி நேரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருடப்பட்டட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் பிந்தைய நாட்களிலும் இதுபோன்ற பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு பின்னர் நீதிபதியின் சொந்த ஜாமினில் பல் வேறு தருணங்களில் விடுதலையாகியுள்ளனர் என்பது ஆச்சரியமளிக்க கூடியதாகவும், அதிர்ச்சியளிக்க கூடிய தகவலாகவும் உள்ளது. இதே நிலை நீடித்தால் இச்சிறுவர்கள் பிற்காலத்தில் பாதை மாறிவிடக்கூடும் என்ற அடிப்படையில் இச்சிறுவர்களை முறையாக சீர்திருத்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கீழக்கரை SDPI கட்சி கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் திலகவதி மற்றும் சார்பு ஆய்வாளர் வசந்த் ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இது சம்பந்தமாக கீழக்கரை SDPI நிர்வாகி அஷ்ரஃப் கூறுகையில், “ இச்சிறுவர்கள் ஆரம்பத்தில் சாப்பிட கொடுத்த இட்லி கடையலேய கூரையை பிரித்து பணத்தை திருடியுள்ளார்கள், பின்னர் அஹமது தெருவில் ஒரு வீட்டில் நுழைந்து செல் போணை திருடிய பொழுது அகப்பட்டுக்கொண்டான், அதற்கு பின்னரும் பல திருட்டு சம்பவங்கள், தற்பொழுது அடுத்த அளவிளான பெரிய திருட்டில் இறங்கியுள்ளார்கள், ஆகையால் அவர்களின் எதிர் கால நலனை கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் மனு கொடுத்துள்ளோம்” என்றார்.

இந்த முறையாவது காவல்துறையினர் முறையாக இச்சிறுவரகளை சீர்திருத்த பள்ளயில் சேர்ப்பது மூலம் அவர்களுடைய வாழ்வு சீரடைய வாய்ப்புள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.