களை கட்ட தொடங்கிய அமீரக தேசிய தின கொண்டாட்டம் – ஈமான் அமைப்பு சார்பாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு..

ஐக்கிய அரபு அமீரகத்தில் டிசம்பர் 2ம் தேதி தேசிய தினமாக கொண்டாடப்படும். அதை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. வார விடுமுறையும் சேர்ந்து 4 நாட்கள் தொடர்சியாக விடுமுறை வருவதால், பல் வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் பல் வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

துபாயை மையாக கொண்டு இயங்கி வரும் ஈமான் கல்ச்சுரல் செண்டர் சார்பாகவும் (IMAN CULTURAL CENTRE) டிசம்பர் 2ம் தேதி அமீரக தேசிய தினத்தையோட்டி ஜபீல் பூங்காவில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்க உள்ளார்கள். மேலும் இந்நிகழ்ச்சிக்கு பல சிறப்பு விருந்தினர்கள் அமீரகம் மற்றும் தமிழகத்தில் இருந்து பங்கேற்க உள்ளார்கள்.

இந்நிகழ்வில் ஏராளமான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலந்துரையாடல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம்.