வாலிபால் போட்டியில் கடல் கடந்தும் சாதனை புரியும் கீழக்கரை இளைஞர்கள் – வீடியோ தொகுப்புடன்…

சமீபத்தில் சவுதி அரேபியா வணிக தலைநகரான ஜித்தாவில் கேரள இஸ்லாமியர்கள் கமிட்டி (KMCC) நடத்திய வாலிபால் போட்டியில் பல ஊர்களில் இருந்து கலந்து பல் வேறு அணியினர் கலந்து கொண்டார்கள். இப்போட்டியில் இறுதி சுற்றுவரைச் சென்று கீழக்கரை இளைஞர்களை உள்ளடக்கிய FRC (Friends Republic Club) அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. முதல் இடத்தை ஜித்தாவைச் சார்ந்த JVT அணியினர் வென்றனர்.

FRC (Friends Republic Club) அணியில் இருந்த 12 வீர்ர்களில் கீழக்கரையைச் சார்ந்த ஹமீது ராஜா, சாஹுல், பஜ்ருதீன், இஷ்மத், அலியார் மற்றும் இர்ஃபான் ஆகிய 6 பேர் முக்கிய விளையாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்த ஆறு பேரும் கீழக்கரையில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியவர்கள். மேலும் கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த இந்த இளைஞர்கள், கீழக்கரை Jadeed Volleyball Club (JVC) சார்பாக பல மாவட்ட அளவிளான போட்டிகளில, கலந்து கொண்டு அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பு:-

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.