கீழக்கரையில் இரவு முழுவதும் பெய்த மழையினால் பல இடங்கள் பாதிப்பு..

இன்று காலை ஒரு கவிஞன் கூறியது போல் காதலி போல் மகிழ்ச்சியுடன் தொடங்கிய மழை, செல்லும் பொழுது ஊர் மக்களுக்கு பல இன்னல்களை தந்து விட்டு சென்றுள்ளது. நம்முடைய நிருபர் சித்திக் களத்தில் நேரடியாக சென்று சேகரித்த தகவல்கள் உங்கள் பார்வைக்கு…

கீழக்கரை அகமது தெருவில் மரக்கிளைகள் உடைந்து மின்சார கம்பத்தின் மீது விழுந்து ஆபத்து விளைவிக்கும் நிலையில் உள்ளது. கீழக்கரையில் நேற்று இரவு முதல் மழையின் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை ஜின்னா தெருவில் மழையின் காரணமாக வீடு சேதம் அடைந்து ஆபத்தான சூழல் உள்ளது. பல சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டவருக்கு தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.

கீழக்கரையில் உள்ள முக்கிய சாலைகள் மழை நீரால் சூழப்பட்டு மக்கள் நடமாட முடியாமலும், தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள்.

1 Comment

  1. என்று தீருமோ? இந்த அவலநிலை.
    கடந்த 30 வருடங்கலாக இந்த காட்சியைத்தான் கண்டு கொண்டிருக்கிறோம்.

    ஆட்சி மாறினாலும், அதிகாரிகள் மாறினாலும், பத்திரிக்கைகள் எண்ணிக்கை கூடினாலும், புதிய பத்திரிக்கையாளர்கள் வந்தாலும், புதுப்புது சமூக சேவகர்கள் முயன்றாலும்……….

    சிறு துறும்பும் அசைந்தபாடில்லை……..யாருக்கும் எந்த செல்வாக்கும் இல்லை, அனைத்தும் செல்லாக்காசுகள்…. 🙁

    என்று தீருமோ? இந்த அவல நிலை…

Comments are closed.