துபாயில் இருந்து இன்று (31-08-2017) மதுரை வரும் ஸ்பைஸ் ஜெட் விமானம் பல மணி நேரம் தாமதம்..

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் இருந்து தினமும் ஸ்பைஸ்ஜெட் விமானம் மதுரைக்கு இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் செயல்படும் விமானம் கால தாமதத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விமானம் காலை 11.10க்கு துபாயில் இருந்து கிளம்பி 05.00 மணிக்கு மதுரை வந்திறங்க கூடியதாகும். இன்று (31-08-2017), தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல மணி நேரம் தாமதம் ஆகியுள்ளது.

நாளை மறுநாள் இந்தியாவில் ஹஜ் பெருநாளாக இருப்பதால் இன்று (31-08-2017) ஏராளமான பயணிகள் தங்கள் உடைமைகளுடன் நேரத்திற்கு செல்லும் என்ற நம்பிக்கையுடன் பயணிகள் துபாய் விமான நிலையம் வந்தார்கள். ஆனால் பொருட்களை எடுத்துச் செல்லும் பெல்டில் கோளாறு காரணமாக ஐந்து மணி நேரம் தாமதம் ஆகலாம் என்று கூறினார்கள். இறுதியாக உடமைகள் அடுத்த நாள் மதுரை வந்தடையும் என்றும், விமானம் சில மணி நேர தாமதத்துடன் துபாயில் இருந்து கிளம்பும் என்று அறிவித்துள்ளார்கள். பல வருடங்கள் கழித்து தன் குடும்பத்தாரை காண செல்வோருக்கு ஒவ்வொரு நிமிடமும் ஒரு வருட தாமதம் போல் ஆகும்.