கீழக்கரை ராமநாதபுரம் சாலையில் தொடர் விபத்து..

கீழக்கரை திருப்புல்லாணி அருகே லாரியும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆட்டோ ஓட்டுனர் அண்ணதுரை படுகாயம் அடைந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் இராமநாதபுரம் சின்னக்கடை தெருவும் சார்ந்தவர் ஆவார். திருப்புல்லாணி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அதுபோலவே திருப்புல்லாணி பூங்கா அருகே ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆட்டோ நாய் குறுக்கு வந்ததால் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  விசேஷ காலமாக இருப்பதால் அதிகமான வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து அதிகமாக இப்பகுதியில் ஏற்படுகிறது.