ஹமீதியா தொடக்க பள்ளியில் தண்ணீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கீழக்கரை நகரில் மழை பொய்த்துள்ள நிலையில் நீர் நிலைகள் வற்றி கடுமையான தண்ணீர் பற்றாகுறை நிலவி வருகிறது.  இந்நிலையில் மழை வேண்டி பல் வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்குப் நடைபெற்று வருகிறது.

அதே சமயம் தண்ணீரின் அவசியம் மற்றும் அதை சேகரிப்பதில்  அவசியம் பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் முக்கியமான பணியாகும்.  அதன் அடிப்படையில் இன்று (06-07-2017) ஹமீதியா தொடக்க பள்ளியில் தாசீம் பீவி மகளிர் கலைக் கல்லூரியிலிருந்து மாணவிகள் வருகை தந்து மாணவ, மாணவிகள் மத்தியில் நீரின் அவசியம் , நீரை சேமிப்பதின் முக்கியத்துவம், நீரை மறுசுழற்சி மூலம் எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.