சென்னையில் ஹஜ் பயிற்சி முகாம்…

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான சிறப்பு ஹஜ் பயிற்சி முகாம் 02.08.2017 அன்று எழும்பூரிலுள்ள சென்னை கேட் ஹோட்டலில் மாலை 04.00 மணிக்கு நடைபெற உள்ளது. இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவி அப்துல் மஜீத் மஹ்ழரி அவர்கள் கலந்துக்கொண்டு பயிற்சியளிக்கிறார். மேலும், ஹஜ், உம்ரா, ஜியாரத் பயண விபரங்கள் உள்ளிட்ட அரிய பல தகவல்களைக் கொண்ட புனித பயணங்கள் என்ற நூல் வெளியிடப்பட உள்ளது.

ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கலந்துக்கொண்டு பயனடையலாம். பெண்களுக்கு தனி இட வசதி உண்டு. தேனீர், சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு 044-48575554, 7397733575 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.