சத்தியப்பாதை கல்வி தர்ம அறக்கட்டளை மற்றும் கீழை நியூஸ் சார்பாக ஆம்புலன்ஸ் நிதியுதவி..

சத்தியப்பாதை கல்வி தர்ம அறக்கட்டளை (SECT) மற்றும் கீழை நியூஸ் சார்பாக வடக்குத் தெரு சமூக அறக்கட்டளையின் (NASA Trust) ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு இந்திய ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்கொடைக்கான காசோலையை சத்தியப்பாதை கல்வி தர்ம அறக்கட்டளையின் நிறுவனரும், கீழை நியூஸ் நிர்வாகத்தின் மூத்த ஆலோசகருமான கே.எம்.அப்துல்லாஹ் நாசா அறக்கட்டளையின் ஒருங்கினைப்பாளர் மஹ்ரூஃபிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது நாசா அறக்கட்டளையின் உறுப்பினர்ரகளான பஷீர், கண்மணி சீனி, அப்துல் சமது, ஜாகிர் உசேன், அகமது மிர்சா ஆகியோர் உடனிருந்தனர்.

அதேபோல் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் க்ளீன் கீழக்கரை அமைப்பு கடற்கரையை சுத்தம் செய்யும் பணியை கையில் எடுத்தபோதும் சத்தியப்பாதை அறக்கட்டளை நிதி உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சத்தியப்பாதை அறக்கட்டளை கடந்த நான்கு வருடங்களாக கல்வி மற்றும் மருத்துவ உதவியாக இந்திய ரூபாய் நான்கு லட்சத்திற்கும் மேல் நன்கொடைகள் வழங்கி வருகிறது.

1 Comment

Comments are closed.