கீழக்கரையில் ரமலான் மாதத்தில் கடைகளை கூடுதல் நேரம் திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை …

புனித மாதமான ரமலான் மாதம் நேற்று முதல் தமிழகமெங்கும் ஆரம்பம் ஆகியுள்ளது. இந்த புனித மாதத்தில் இஸ்லாமியர்கள் இரவு நேர தொழுகையை முடித்து விட்டு இரவு பத்து மணிக்கு மேல்தான் அன்றாட தேவைகளுக்காக பொருட்களை வாங்க கடைத் தெருவுக்கு செல்வார்கள். ஆனால் இந்த வருடம் காவல் துறையினரின் கெடுபிடியால் சாதாரண நாட்களைப் போல இரவில் 11.00 மணிக்குள் கடைகள் அடைக்கப் பட்டு  விடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

இதுபற்றி கீழக்கரை தெற்கு தெரு ஜமாத்தை சார்ந்தவர் கூறுகையில், கடந்த வருடங்களில் காவல்துறையினர் நோன்பு காலங்களை கவனத்தில் கொண்டு வியாபாரிகளிடம் இணக்கமாக கூடுதல் நேரம் வியாபார தலங்களை திறந்து வைக்க அனுமதிப்பார்கள், ஆனால் இந்த வருடம் அதிக கெடுபிடியால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள். இப்பிரச்சினையை ஜமாத்தார்களும், சமூக நல அமைப்புகளும் ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையர் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்ய வேண்டும் என்றார்.