வினையாக்கும் விளையாட்டு பொம்மைகள்

இன்றைய கால கட்டத்தில் பொம்மைகள் விரும்பாத குழந்தைகளை நம்மால் பார்க்க முடியாது. அது போல் கார் மற்றும் வானூர்தி போன்ற பொம்மைகள் இளைஞர்களையும் விட்டு வைக்க வில்லை என்று சொல்லும் அளவுக்கு விளையாட்டில் மூழ்கி இருக்கிறார்கள்.

விடுமுறையில் தாயகம் திரும்பும் வெளி நாட்டு வாழ் அன்பர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பொம்மைகளை அதிக அளவில் விலை அதிகமாக இருந்தாலும் வாங்கி செல்வதை நம்மால் காண முடிகிறது. தற்போது பேட்டரி மூலம் இயங்கக்கூடிய மின்னணு பொம்மைகள் மற்றும் சாதாரான பொம்மைகளும் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

குழந்தைகள் நலத்துக்கு கேடு விளைவிக்க கூடியதாக இருப்பதால் நாம் பொம்மைகள் வாங்கும் போது அதிக கவனம் செலுத்தி தரமானதை வாங்க வேண்டும் என்று பொது மக்களுக்கு துபாய் முனிசிபாலிட்டி அறிவுறுத்துகிறது.

சந்தையில் அதிக அளவில் விற்கப்படும் பொம்மைகளில் ஈயம், காந்தம், விஷ ரசாயனம் கலந்து இருப்பதால் குறிப்பட்ட சில பொருட்களுக்கு துபாய் முனிசிபாலிட்டி தடை விதித்து மக்கள் நலன் கருதி சில பாதுகாப்பு கட்டுபாடுகளையும் விதித்துள்ளது.

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட அனைத்து வகையான விளையாட்டு பொருட்களிலும் அதை பயன்படுத்தும் முறை மற்றும் பயன்பாடு தொடர்பான அபாயங்கள் குறித்த விளக்கங்களுமர அச்சிடப்பட்டு இருக்க வேண்டும் என்று பாதுகாப்பு நெறிமுறைகள் விளக்குகிறது..

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பேட்டரியில் இயங்கும் பொம்மைகளை வைத்து விளையாடும் போது பெற்றோர்கள் அவசியம் கண்காணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் முனிசிபாலிட்டியால் தடை செய்யப்பட்ட விளையாட்டு பொருட்களின் பட்டியல் பின் வருமாறு:

1. JCB – Bridge Building Play Set
2. Moto-GT
3. Street Bike
4. Soft Toy (Owl)
5. Yoyo Rattle
6. Armoured Car
7. Jewelry Box and Beads Making Set
8. Yo Yo Ball
9. Dinosaur Egg – Growing Pet
10. Balloon Helicopter

இந்த நவீன யுகத்தில் தொழில் நுட்பம் நிறைந்த விளையாட்டு பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் ஆனால் சில நேரங்களில் வினையில் போய் முடிகிறது என்பதால் தரத்தையும், பாதுகாப்பையும் அடிப்படையாக கொண்டே பொருட்களை வாங்கினால் மட்டுமே தீங்கிலிருந்து நம் குழந்தைகளை காப்பாற்ற முடியும்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image