Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மரம் நட விரும்பும் மக்கள் மாநகராட்சியை அணுகி அனுமதி பெறலாம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

மரம் நட விரும்பும் மக்கள் மாநகராட்சியை அணுகி அனுமதி பெறலாம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

by keelai

சென்னையில் பசுமையான நிழல் தரும் மரங்களை அதிகரிக்கும் வண்ணம், பொது இடங்களில் மரக்கன்றுகள் நட விரும்புவோர், மாநகராட்சியை அணுகி பெறலாம். மரங்களை நடுவதற்கான நிபந்தனைகள், சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் வீசிய, ‘வர்தா’ புயலால், சென்னையின் பசுமை போர்வை பாதியாக குறைந்துவிட்டது. இழந்த பசுமையை மீட்பதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில், சென்னையில் மரக்கன்றுகள் நட வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால், மரக்கன்றுகள் நடுவதற்கான அனுமதியும், நட விரும்புவோருக்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. மாநகராட்சி விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான், பொது இடங்களில் இனி மரம் நட முடியும்.

அதே போல 7 மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்ட சாலை, 7 முதல் 12 மீ., அகல சாலை, 12 மீ., மேல் அகலம் கொண்ட சாலைகளில், எந்தெந்த வகையான மரக்கன்றுகள் நடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகளை எப்படி நட வேண்டும் என்பன போன்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

நடும் மரக்கன்றுகளுக்கு கூண்டு அமைக்க வேண்டும், ஓராண்டுக்கு பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, ஐந்து நிபந்தனைகள் மட்டுமே மாநகராட்சி விதிக்கிறது. இது சம்பந்தமான மேலதிக விபரங்களை http://www.chennaicorporation.gov.in/latestNews.jsp என்ற இணையதளத்தில் சென்று பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!